சேலம் மாவட்டம் ஒமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவிலான பருவ மழை பெய்துள்ளதால் மாமரங்கள் பூக்கள் பூத்து காய்க்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.மேலும் நிலத்தடி நீர் மட்டமும்
கணிசமான அளவில் உயர்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் விவசாய பணிகள் இந்தாண்டு களைகட்டியுள்ளது. நெல், கரும்பு, சக்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்டவை அதிகளவில் இங்கு பயிரிடப்படுவது வழக்கம்.இதற்கு அடுத்தபடியாக இங்கு மாம்பழங்கள் அதிகளவில் பயிரடப்படுகிறது.
சேலம் மாம்பழங்களுக்கென தனி மதிப்பு உலகளவில் இருந்துகொண்டே இருக்கிறது.பெங்களூரா,மல்கோவா,குண்டு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரடப்படுகிறது.போதிய அளவிற்கு மழை பெய்துள்ளதால் தற்போது மாமரங்கள் பூக்கள் பூத்து காய்க்க தொடங்கியுள்ளன.இதனால் மகிழ்ச்சி கடலில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.இந்தாண்டு மாம்பழ விளைச்சல் நல்ல அளவில் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
—வேந்தன்







