“2023இல் இந்திய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு”

வங்கி, தொழில்நுட்பம், ஊடகம், விளையாட்டு, நிதிசார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 2023இல் அதிக சம்பள உயர்வு வர வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாதச் சம்பளதாரர்கள் அடுத்த ஆண்டு சம்பள உயர்வை பெறுவார்கள். 9.8 சதவீத…

வங்கி, தொழில்நுட்பம், ஊடகம், விளையாட்டு, நிதிசார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 2023இல் அதிக சம்பள உயர்வு வர வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மாதச் சம்பளதாரர்கள் அடுத்த ஆண்டு சம்பள உயர்வை பெறுவார்கள். 9.8 சதவீத சம்பள உயர்வை அவர்கள் பெற வாய்ப்புள்ளது என்று தி வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் சம்பள பட்ஜெட் திட்டமிடல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊடகம், கேமிங், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 10 சதவீதத்திற்கு மேல் சம்பள உயர்வு இருக்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் தான் சம்பள உயர்வு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு 4 சதவீத சம்பள உயர்வு இருக்கும். அடுத்த ஆண்டு இந்திய நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

54 சதவீத முதலாளிகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிக சம்பள உயர்வுக்காக வரவு செலவுத் திட்டம் வகுத்துள்ளனர். அவர்களில் 24.4 சதவீதம் பேர் தங்கள் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 2022 உடன் ஒப்பிடும்போது 5.4 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் பட்ஜெட்டைக் குறைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.