சலார் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சலார் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சலார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப்…

சலார் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சலார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.  பிரஷாந்த் நீல் இயக்கத்தில் முதன்முறையாக பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்திருந்தனர். கே.ஜி.எப் வெற்றியை தொடர்ந்து சலார் வெளிவருவதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில்,  இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில்  அமைந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது.  மற்ற  மொழிகளில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில்,  இதுவரை உலகளவில் ரூ. 550 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலார் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.  ஆனால் அன்று வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்  அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Netflix_INSouth/status/1748231314988290418

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.