முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.23ல் அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.  பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில்,  புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்,  சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.