மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் சப்பர பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய 26-ம்ஆண்டு திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் 9ம் திருநாளான சனிக்கிழமை இரவில் ஆலயத்தில் திருத்தல பங்கு தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார், பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார் இணைந்து’ “பிறர் அன்பை பெறத்தெரிந்த அன்னை ” எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சிறப்பு அழைப்பாளர்களாக ஆலயம் வந்திருந்த முகமது சாலிஹாபுரம் பள்ளிவாசல் பேஷ் இமாம் முஹம்மது, புதுக்கிராமம் சக்தி விநாயகர் கோயில் தலைவர் சங்கரன், வேம்படி சுடலைமாடன் கோவில் தர்மகர்த்தா மகேஷ் சுடலைமாடசாமி கோயில் அறங்காவலர் சோலைமுருகன் ஆகியோரை பங்கு தந்தை பொன்னாடை அணிவித்து வரவேற்று பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிசுத்த செல்வ மாதா அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட வாகனத்தை மும்மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து சப்பர பவனியை தொடங்கி வைத்தார்கள்.
புதுக்கிராமம் மெயின்ரோடு தெற்கு புதுக்கிராமம் 1-வது தெரு ,கடலையூர் மெயின்ரோடு, பங்களா தெரு வளைவு வரை சென்று புதுக்கிராமம்-2வது தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது பின் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.








