சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இதற்கான தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட து. சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இன்று முதல் ஜூலை21 வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளோடு, தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடக்கும் என அறிவித்துள்ளனர்.
இதற்கு பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org/#/login என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.