ராகவா லாரன்ஸ் உடன் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறு ஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி, ”சந்திரமுகி 2” படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘டைரி’ பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
https://twitter.com/offl_Lawrence/status/1680447927616172033?s=20
ராகவா லாரன்ஸ் தனது தம்பி எட்வின் உடன் இணைந்து நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இவர்கள் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘புல்லட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.








