பொங்கல் திருநாளன்று CA தேர்வு – “தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்” – மத்திய அரசை சாடிய சு.வெங்கடேசன் எம்.பி

பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள் வைத்து தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்தார். பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் வரும் ஜனவரி 12,…

பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள் வைத்து தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்தார்.

பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் வரும் ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தேதிகளில் தமிழர் பண்டிகைகளான பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், விவசாயிகளுக்கான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், தமிழர் பண்டிகை நாட்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

” பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

இதையும் படியுங்கள் : 1992 மும்பை கலவரத்திற்காக உத்தவ் தாக்கரே மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் பதிவு உண்மையா?

சி.ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/SuVe4Madurai/status/1860526824310341690

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.