முக்கியச் செய்திகள் தமிழகம்

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல் தெரிவித்தார்

திருச்சி அருகே ஆடு திருடிய நபர்களை துரத்திச்சென்றபோது நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார். திருவெறும்பூர் அடுத்த சோழமா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, சிறப்பு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் வீரத்தோடும், விவேகத்தோடும் ஒரு சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதாக தெரிவித்தார். மேலும், போலீசார் தனிமையான இடத்திற்கு ரோந்து பணிக்கு செல்லும் போது தங்கள் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் சைலேந்திரபாபு கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி

Gayathri Venkatesan

நாட்டில் 79% குறைந்த சில்லறை விற்பனை!

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது!

Jeba Arul Robinson