’20 வருஷத்துக்கு முன்னால பாலியல் வன்கொடுமை’: மரடோனா மீது பெண் பகீர்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மரடோனா மீது கியூபாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்  மரடோனா (Diego Maradona). அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட…

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மரடோனா மீது கியூபாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்  மரடோனா (Diego Maradona). அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 1986-ஆம் ஆண்டு, உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தவர் இவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார்.

இந்நிலையில்  20 வருடத்துக்கு முன் மரடோனா தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை அவர் பிடித்து வைத்துக் கொண்டார் என்றும் கியூபாவை சேர்ந்த மாவிஸ் அல்வரேஸ் ரெகோ என்ற 37 வயது பெண்  பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

தற்போது மியாமியில் வசித்து வரும் இவர் இதுபற்றி கூறும்போது, எனது 16 வயதில் மரடோனாவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 40 வயது. கியூபாவில் போதை மருந்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையில் அப்போது இருந்தார். என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். என்னை அவர் வென்றுவிட்டார். பிறகு போதை மருந்தை பயன்படுத்த என்னை பழக்கினார். நான் அவரை எந்தளவுக்கு நேசித்தேனோ, அந்தளவுக்கு வெறுக்கவும் செய்தேன்.

ஒரு கட்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளவும் நினைத்தேன். மரடோனா மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், இப்போது அதை சொல்ல காரணம், மற்ற பெண்களுக்கு வலிமை யையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு மாவிஸ் அல்வரேஸ் ரெகோ தெரிவித்துள்ளார்.

மரடோனாவுடன் இருந்த சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதுபற்றி ரெகோ புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அர்ஜென்டினா வின் அரசு வழக்கறிஞரிடம் இதை புகாராக கொண்டு சென்றுள்ளது. ’வேறு எந்த நடவடிக்கைகளையும் நான் தொடக்கபோவதில்லை’ என்று தெரிவித்துள்ள அந்தப் பெண், நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்., மீதியை நீதிமன்றத்துக்கு விட்டு விடுகிறேன்’ என்று கூறியுள்ளார். இவருடைய குற்றச்சாட்டை மரடோனாவின் வழக்கறிஞர் கள் குழு மறுத்துள்ளது.

பிரபல கால்பந்து வீரர் மரடோனா மீது பெண் ஒருவர் திடீரென பாலியல் வன்கொடுகை புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.