முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

இதுதான் முதன்முறை: சர்வதேச விண்வெளி மையத்தில் தொடங்கியது ஷூட்டிங்

வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்ய திரைப்படம் ஒன்றின் ஷூட்டிங் சர்வதேச விண்வெளி மையத்தில் தொடங்கி இருக்கிறது.

பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ (Klim Shipenko). இவர் ’தி சேலஞ்ச்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் கதை விண்வெளியில் நடப்பது போல அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான உண்மையாகவே விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்தது. அதற்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல தீர்மானிக்கப் பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இயக்குநர் க்ளிம் ஷிபென் கோ (வயது 38), நடிகை யுலியா பெரெஸில்ட் ( Yulia Peresild), விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண் வெளிக்குச் சென்றனர். அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கின்றனர். அது முடிந்த தும் சோயூஸ் எம்எஸ் 18 விண்களம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர். அவர் களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகிறார்.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் இதுபோன்ற விண்வெளி படப்பிடிப்பை நடத்த இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

ரஷ்ய திரைப்படமான ’தி சேலஞ்ச்’-சில் நடிப்பதற்கு விண்ணப்பித்த 3 ஆயிரம் பேர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நடிகை நடிகை பெரஸில்ட், “உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடினமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றும்போது அனைத்து சவால்களும் மோசமாக தோன்றாது என நினைக்கிறேன். அதே நேரம் இது சுவாரஸ்யம் நிறைந்த பயணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

G SaravanaKumar

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன!

Gayathri Venkatesan

மியான்மரில் பேஸ்புக்குக்குத் தடை!

Jayapriya