உக்ரைன் நடத்திய தாக்குதலில் பற்றி எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்குகள்!

கடந்த இரண்டு நாட்களில்,  இரண்டு முறை ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது.…

கடந்த இரண்டு நாட்களில்,  இரண்டு முறை ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள இந்த போர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஆளில்லாத விமானம் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகளின் மீத் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6000 கனமீட்டர் கொள்ளளவுடைய நான்கு எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றியதாகவும், இந்த தீ 1000 சதுர மீட்டர் பரவியதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில், இரண்டு முறை எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதலு நடத்தியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. வியாழன் கிழமையன்று ரஷ்யாவின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள எண்ணெய் ஏற்றும் முனையத்தில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் உயிர் சேதங்களோ, காயங்களோ இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.