ஆர்ஜே பாலாஜி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “ரன் பேபி ரன்” திரைப்படம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், ராதிகா சரத்குமார், நடித்துள்ள ரன் பேபி ரன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, சாம் C.S இசையமைத்துள்ளார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. விரைவில் அவருக்கு திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது காரில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கே தெரியாமல் ஏறி விடுகிறார். தான் ஒரு பிரச்சினையில் இருப்பதாகவும், ஒரு மணி நேரம் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாகவும் கூறுகிறார்.
பின்பு அவரது வீட்டிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து விடுகிறார். சம்பந்தமில்லாமல் ஆர்.ஜே.பாலாஜியை இந்த வலையில் இழுத்துவிட்டது யார்? அவர் தப்பித்தாரா? எதற்காக ஐஸ்வர்யா ராஜேஸ் இறந்து போனார் என்பது தான் கதை.
வழக்கமாக புன்னகை முகத்துடன் காமெடி கேரக்டரில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட சிரிக்கவில்லை. அமைதியான முகத்துடன் திரில்லருக்கு ஏற்றவாரு அருமையாக நடித்துள்ளார். சண்டை காட்சிகள் இப்படத்தில் உள்ளது. சண்டை காட்சிகளை பொறுத்தவரை ஆர்.ஜே.பாலாஜிக்கு முதல் ட்ரை என்று சொல்லலாம். அந்த காட்சிகள் மாஜாவாக இருந்தது.
ஐஸ்வர்யா ராஜேஸ் சில இடங்களில் தோன்றினாலும் அவரின் நடிப்பு ஒவ்வொரு சீனுக்கும் உயிர் கொடுக்கிறது. திரில்லர் படத்திற்கு இசை முக்கியம். அந்த வகையில் சாம் C.S இசையில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவு இப்படத்திற்கு பக்கபலம் என்றே சொல்லலாம்.
தேவையில்லாத பாடல்கள், தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு படத்தை எடுத்துள்ளனர். இதற்காகவே முதலில் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம். இப்படத்தில் நடிகர்களின் தேர்வு சூப்பர். ரன் பேபி ரன் திரையரங்குகளில் விக்கெட் கொடுக்காமல் ஸ்கோர் செய்யும்.
– சுஷ்மா சுரேஷ்