CSK vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  சென்னை சூப்பர் கிஙஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை…

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை சூப்பர் கிஙஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரின் 3வது பந்திலேயே அவுட்டாகி 10 ரன்களுடன் வெளியேறினார். ஜோஸ் பட்லருடன், தேவ்தட் படிக்கல் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

தனியொரு ஆளாக நிலைத்து ஆடிய பட்லர் 52 ரன்களுடன் கிளம்ப 17-வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். ஆட்ட இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி எட்டிப்பிடிக்க களமிறங்கியது. முதல் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிசுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீச வைத்து சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்ததால் 17 ஓவர்கள் முடிவுல் 120 களை மட்டுமே எடுத்தது CSK. ஜடேஜாவின் சிக்ஸர் மழையால் 19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  வெற்றி இலக்கிற்கு அறுகில் வந்தது.

இந்நிலையில் கடைசி ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து சென்னை அணி போராடித் தோல்வியடைந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.