வாரிசின் வரிசையில் “ருத்ரன்” – திரை விமர்சனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள “ருத்ரன்” திரைப்படம் எப்படி உள்ளது.? விரிவாக அலசலாம். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ‘5 ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும்  திரில்லர் திரைப்படம் தான் ருத்ரன். இப்படத்தில்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள “ருத்ரன்” திரைப்படம் எப்படி உள்ளது.? விரிவாக அலசலாம்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ‘5 ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும்  திரில்லர் திரைப்படம் தான் ருத்ரன். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர் மற்றும் நாசர் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  பின்னனி இசையை  இசையமைப்பாளர் சாம் C.S அமைத்துள்ளார். வாருங்கள் மக்களே படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.

நாசர் மற்றும் பூர்ணிமாவின் மகன் ராகவா லாரன்ஸ். நாசர்  டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் பல நாட்களாக வேலைக்கு போகாமல் ஏமாற்றி வருகிறார் ராகவா லாரன்ஸ். ஒரு வழியாக ஐடி கம்பெனியில் வேலை கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் நாசரின் நம்பிக்கையான  ஊழியர் பணத்தை  அவரது நிறுவனத்தில் கொள்ளையடிக்கிறார். ஆகையால் நாசரின் குடும்பம்  பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது.

இந்த சோகம் தாங்க முடியாமல் நாசர் இறந்து விடுகிறார். இதற்கிடையில் தன் காதலியான பிரியா பவானி சங்கரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ராகவா லாரன்ஸ். பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாடு செல்கிறார். அதன் பின்னர் தனது லாபத்துக்காக சரத்குமார், லாரன்ஸ் குடும்பத்தினரை சீண்டுகிறார். இது எங்கு கொண்டு போய் முடிகிறது என்பது தான் படத்தின் மீதி கதை.

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸின் டான்ஸ், ஸ்டைல், லுக் அனைத்தும் சூப்பர். படத்தில் பின்னணி இசை  உருட்டிய மாவையே உருட்டினதுதான். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் அரைத்த மாவே அரைத்ததுதான். வழக்கம்போல் ராகவா லாரன்ஸ் படம் என்றால் கடைசி சீனில் ஒரு சாமி பாட்டு இருக்கும் அதே போல் தான் இந்த படத்திலும் பாடல் உள்ளது.

படத்தின் இடைவெவேளையில்  நம் மக்களுக்கு இந்த படம் பிடிச்சு இருக்கானு கேக்கலாம்னு வந்தா படத்துல என்ன சொல்ல வராய்ங்கன்னு புரியலையே அப்படின்னு பேசிக்கிட்டாங்க. சரி படம் முடிச்சதுக்கு அப்புறம் வெளிய வந்தா ஒரு சில பேர் படம் சூப்பர் ன்னு சொல்றாங்க, இன்னும் சில பேர் படம் எடுக்கணும் எடுப்பாய்ங்களான்னு சொல்றாங்க. ஆனா என்னுடைய ஒபினியன் என்னன்னா இந்த படத்துல உள்ள அம்மா சென்டிமென்ட்டுக்காகவே படத்த பாக்கலாம். அவ்வளவு உருக்கமா இருந்துச்சு.

ருத்ரன் 2 அப்படின்ற தலைப்பு போட்ட உடனே தான் கொஞ்சம் திக்குன்னு ஆகிருச்சு. படத்தை எல்லாரும் தியேட்டரில் குடும்பத்துடன் போய் பார்க்கலாம். வாரிசை தொடர்ந்து அந்த வரிசையில் மீண்டும் இன்னும் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி “ருத்ரன்”.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.