ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து, ரேபரேலி தொகுதியில்…

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து, ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர் என குற்றச்சாட்டினார்.

அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது. எனக்கூறிய அவர், அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தற்போது இருந்தே, பிரச்சாரம் தொடங்கி இருப்பதால், உத்தரப்பிரதேச அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.