’ஆர்ஆர்ஆர்’ பட புரமோஷனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சல்மான் கான்!

மும்பையில் நடந்த ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், தான் நடித்து சூப்பர் ஹிட்டான ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் அடுத்தப் பாகத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். ’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர்…

மும்பையில் நடந்த ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், தான் நடித்து சூப்பர் ஹிட்டான ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் அடுத்தப் பாகத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

’பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கியுள்ள படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, இந்தி ஹீரோ அஜய்தேவ்கன், நடிகை ஆலியா பட், ஸ்ரேயா உட்பட பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுள்ளது.

மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு இப்போது மேற்கொண்டு வருகிறது.

இந்தப் படத்தின் புரமோஷன் மும்பையில் நேற்று நடந்தது. இதில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், நடிகை ஆலியா பட், ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா ஆகியோர் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சல்மான் கான், தான் நடித்து சூப்பர் ஹிட்டான ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தின் அடுத்தப் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதில் தான் நடிக்க இருப்பதாகவும் அறிவித்தார். ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை எழுதியிருந்தார். அடுத்த பாகத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.