ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கனரா வங்கியில் ₹ 538 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில முன்னாள் நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடனாக 848.86 கோடிக்கு அனுமதித்ததாகவும், அதில் ₹ 538.62 கோடி நிலுவையில் இருப்பதாகவும் கனரா வங்கியின் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நரேஷ் கோயல் நேற்று ஆஜரானார். நீண்ட விசாரணைக்கு பிறகு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள்கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகியது குறிப்பிடத்தக்கது.







