வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3 கோடியே 25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, வள்ளலாரின் முப்பெரும் விழாவை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடும் வகையில், டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசின் மானியத் தொகையை காசோலையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழங்கினார். 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விழா சிறப்புக்குழுவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பெற்றுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் : ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி.ராமன் சாலை எனப் பெயர் மாற்றப்பட்ட சாலையின் பெயர் பலகையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். லாயிட்ஸ் கார்னர் பகுதி வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.