முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன்” – நிதியமைச்சர் பிடிஆர்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அப்போது பேசிய அவர், 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது தயாரிப்பதற்கு முன்னர் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.”

“எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட தகவல்களை ஆளுங்கட்சியாக வரும்போது நாங்களே வெளியிடுகிறோம். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவும், வெளிப்படை தன்மையுடன் அரசு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்தவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.”

“தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நான்கில் ஒரு பங்கு வருவாய் குறைந்து வருகிறது. 2011-2016 அதிமுக ஆட்சியில் சுமார் 17 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% அத்தியாவசிய செலவீனங்களுக்காக பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த அளவு சரிவை சந்திக்கவில்லை.”

“கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னரே இந்த வீழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் தொழிற்துறை உற்பத்தி் பீகார், உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து

Gayathri Venkatesan

இந்தியா அணி அபார வெற்றி!

Niruban Chakkaaravarthi

திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமித்ஷா

Gayathri Venkatesan