விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அடுத்தத் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த…

விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அடுத்தத் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி நிதி உதவி, வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் அடுத்த தவணை நிதியை இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார். இதன்படி 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.