முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னையில் இருந்து துபாயிக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையைத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது துபாயிற்கு செல்வதற்காக சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த முகமது உசேன் (வயது 30) என்பவர் விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்  அவரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். விசாசரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது கைப்பைகளில் ரகசிய அறைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்தனா். அவற்றில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இவரிடம் இருந்து ரூ. 19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக முகமது உசேனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று ரூ.97 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால்கள் கடத்த முயன்ற போது அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

EZHILARASAN D

தமிழை உலகம் முழுவதும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி- எல்.முருகன்

G SaravanaKumar

கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு

Vandhana