மத்தியப் பிரதேசத்தில் ரூ.14.6 கோடி பணம் மற்றும் வெள்ளி பறிமுதல்!

மத்தியப் பிரதேசத்தில் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.142 கோடி மதிப்பிலான பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெய்னியில் உள்ள ஒரு வீட்டில் சூதாடுவதாக, காவல் துறைக்கு கிடைத்த…

மத்தியப் பிரதேசத்தில் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.142 கோடி மதிப்பிலான பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெய்னியில் உள்ள ஒரு வீட்டில் சூதாடுவதாக, காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.14 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணம், 7 கிலோ வெள்ளி பார்கள் மற்றும் 7 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : எஸ்.கே.23 : புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

காவல்துறையினர் நடத்திய சோதனையில் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட மொபைல்கள், 7 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா இன்னும் தலைமறைவாக உள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.