திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளி இயங்கி…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜுன் 14) இந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரையும் தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து வனத்துறைக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தை எந்த வழியாக பள்ளிக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்த கூறியுள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.