முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவரிடம் சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை செய்து பார்த்தபோது, உருளை வடிவ தங்க தகடை, பழச்சாறு பிழியும் கருவியின் மோட்டாரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 200 கிராம் எடையுள்ள அந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.10 லட்சம்.

இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

’அதை பார்த்ததுமே மனசை தொட்டுடுச்சி’ நெதர்லாந்து பறந்த தெரு நாய்!

Gayathri Venkatesan

ஊரடங்கு நீட்டிப்பு: வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள்!

Halley karthi

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுபாடுகள்!

Ezhilarasan