முக்கியச் செய்திகள் விளையாட்டு

சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான மகாராஷ்டிர கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி டி20 உள்ளூர் தொடர் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்த வருடத்துக்கானப் போட்டி, நவம்பர் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், முதல் ஆட்டத்தில் தமிழ்நாட்டை எதிர்கொள்கிறது மகாராஷ்ட்ரா அணி. தமிழ்நாட்டு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், காயம் காரணமாக திடீரென விலகினார். இதனால், விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடியவர் ருதுராஜ். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற காரணமாக இருந்தவர். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை பெற்றவர் இவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயத்தில் இருந்து அவர் இன்னும் மீளாததால் மகாராஷ்டிர அணியில் இடம்பெறவில்லை.

Advertisement:
SHARE

Related posts

கார்த்திகை தீபத் திருவிழா; 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்

Ezhilarasan

ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி: மும்பை நீதிமன்றம் உத்தரவு

Saravana Kumar

சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்

Gayathri Venkatesan