முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழா –
மீன்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றுடன் திரும்பிய கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம் , சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள முறக்கண்மாய்
சுமார் 500 ஏக்கர் பரப்பளவும், 800 ஏக்கர் அளவிற்கு பாசனம் பெறக்கூடிய ஆயகட்டுதாரர்களை கொண்ட மிகப்பெரிய கண்மாயாகும்.
இக்கண்மாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், விவசாயம் மேற்கொண்ட கிராமத்து மக்கள் வரும் ஆண்டுகளில் விவசாயம் செழிக்க பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்த பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் அடிப்படையில் மீன்பிடித் திருவிழா தொடங்கியது. இதில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் கச்சா, ஊத்தா, பரி முதலிய பொருட்களைக் கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர். ஜிலேபி ,கெண்டை, விரால் போன்ற மீன்கள் குறைந்த அளவிலே கிடைத்தது.
மேலும், அதிகாலையில் இருந்து இவ்விழாவில் பங்கேற்பதற்காக , அடர்ந்த
காட்டுப்பகுதிக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்களுக்கும் , மீன்பிடி வீரர்களுக்கும் மீன்கள் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
-கு.பாலமுருகன்