சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விருத்தாசலம் புறவழிச் சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைத்தனர். கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் அடுத்த நெய்வேலி சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்துடன் தனது…

விருத்தாசலம் புறவழிச் சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைத்தனர்.

கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் அடுத்த நெய்வேலி சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்துடன்
தனது காரில் , விருத்தாசலம் புறவழிச் சாலை வழியாக கும்பகோணம் சென்றனர்.
பொன்னேரி அருகே, புறவழி சாலையில் செல்லும் போது திடீரென கார் தீப்பிடித்து
எரிய தொடங்கியது . இதனால், கட்டுப்பாட்டை இழந்த காரை  சிலம்பரசன் உடனடியாக காரை நிறுத்திவிட்டார்.

மேலும் , காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கிவிட்டனர். பின்னர் , பொதுமக்களும்
தீயணைப்புத் துறையினரும் தீயை அணைத்து , தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இதனால் , அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அதிக வெப்பத்தின்
காரணமாக தீப்பிடித்து எரிந்ததா?. என விசாரணை செய்து வருகின்றனர் . இந்த திடீர் தீ
விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.