ரூட்டு தல பிரச்சனையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும்
பூந்தமல்லி ரூட் மாணவர்கள் சுமார் 20 நபர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னல்
அருகில் கத்தி மற்றும் கல்லால் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சம்பந்தமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கீழ்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூட்டு தல பிரச்சனையில் மாணவர்கள் சண்டையிடுவதற்காக 8 பட்டா கத்திகள் மற்றும் இரண்டு பைகளில் காலி மதுபாட்டில்களை ஹாரிங்டன் சாலை பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து, எட்டு பட்டாக்கத்திகளையும், இரண்டு பைகள் நிறைய காலி மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூட்டு தல பிரச்சனையில் தாக்குதலில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்களை
கீழ்ப்பாக்கம் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.