டெல்லியில் ஓடும் பைக்கில் காதல் ஜோடியின் ‘ரொமான்ஸ்’ – கொந்தளித்த நெட்டிசன்கள்!

டெல்லி நெடுஞ்சாலையில், இளைஞரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டே பைக்கில் செல்லும் காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலை பாதுகாப்பு விதிமீறல்களை தடுக்க டெல்லி அரசு…

டெல்லி நெடுஞ்சாலையில், இளைஞரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டே பைக்கில் செல்லும் காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாலை பாதுகாப்பு விதிமீறல்களை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் யாரேனும் ஈடுபட்டால் டெல்லி போக்குவரத்து காவல்துறை செயலியில் உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்டிச் செல்லும் போது பெண் ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்வது போன்ற வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை மேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக சாகசம் செய்வது, பிராங்க் செய்வதற்காக வாகனங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தல் செய்வது போன்ற வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றன. அதே வேலையில் இளம் ஜோடிகள் பைக்குகளில் வேகமாக செல்லும் போது அனைவரும் பார்க்கும் வகையில் தங்கள் ரொமான்ஸ் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் , புதுடெல்லியில் இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரொமான்ஸ் செய்து கொண்டே சென்ற சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காதல் ஜோடியின் அத்துமீறிய அந்த செயலை, அப்போது அருகில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. இதனை @Buntea என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவில் “டெல்லியின் முட்டாள்கள் என எழுதி பதிவிட்டுள்ளதோடு, வீடியோ எடுக்கப்பட்ட நேரம் – 7:15pm, நாள் – ஞாயிறு 16-ஜூலை, அவுட்டர் ரிங் ரோடு மேம்பாலம், Near Mangolpuri என்று எழுதி பதிவிட்டுள்ளார்.

இதனையும் படிக்க: ஓடும் பைக்கில் காதல் ஜோடியின் ‘ரொமான்ஸ்’ – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஹெல்மெட்டும் அணியாமல் அஜாக்கிரதையாக சென்றுள்ளனர். உடனடியாக அவர்கள் இருவர் மீதும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விதிமீறலுடன் செயல்பட்ட அந்த ஜோடிக்கு நிச்சயம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். வீடியோவை பார்த்த மேலும் சிலர், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘ரொமான்ஸ்’ செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவிற்கு பதிலளித்த டெல்லி போக்குவரத்து காவல்துறை, இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை மீறுவோர் பற்றி தங்களது செயலியில் புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர்.

https://twitter.com/Buntea/status/1680593519923314688?s=20

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இதேபோன்றொரு சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் வாலிபரின் மடியில் அமர்ந்த கட்டிபிடித்தபடி, இளம்பெண் ஒருவர் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கோபத்திற்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.