பெங்களூருவில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மத்திய குற்றப்பிரிவு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது. மத்திய புலனாய்வுத் துறையினருடன் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் 5 சந்தேக நபர்களை சிசிபி கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட உடமைகள் மற்றும் வெடிபொருட்களும்பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அனைத்து சந்தேக நபர்களிடமும் சிசிபி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சந்தேக நபர்களுடன் மேலும் 2 சந்தேக நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரும் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள். இந்த சந்தேக நபர்கள் பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்ததாக மத்திய குற்றப்பிரிவு சந்தேகிக்கின்றது. இந்த ஐந்து சந்தேக நபர்களும் 2017 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் சிறையில் இருந்த சில பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.








