நெடுஞ்சாலையில், வாலிபரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே பைக்கில் செல்லும் காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் வாலிபரின் மடியில் அமர்ந்த கட்டிபிடித்தபடி, இளம்பெண் ஒருவர் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பைக்கின் பெட்ரோல் டேங் மீது அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காதல் ஜோடியின் அத்துமீறிய அந்த செயலை, அப்போது அருகில் காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் சாலை பாதுகாப்பை விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக சென்றதற்கு உத்திரப்பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது மட்டுமின்றி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டரில் உள்ள பிற பயனர்களும் உத்தர பிரதேச காவல்துறை மற்றும் காசியாபாத் போக்குவரத்து காவல் துறையைக் குறியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
வீடியோவை பார்த்த மேலும் சிலர், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘ரொமான்ஸ்’ செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? வைரல் வீடியோவுக்காக எந்த எல்லைக்கும் போவதா? என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய காசியாபாத் காவல்துறை துணை ஆணையர் இந்த சம்பவம் தொடர்பாக, வீடியோவை ஆய்வு செய்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க இந்திராபுரம் காவல் ஆய்வாளரிடம் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து காசியாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, வீடியோவில் உள்ள காதல் ஜோடியின் முகம் தெளிவாக தெரியாத நிலையில், மோட்டார் சைக்கிளின் எண் தெரிந்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
https://twitter.com/Akashkchoudhary/status/1671231813614964740?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









