முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?

ஊராட்சி நிர்வாகத்தில் 56% அளவுக்கு மகளிர் இடம் பெற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019, 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 50% என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு அதிகமான பிரதிநிதித்துவத்தை மகளிர் பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்களில் 7,012 இடங்களிலும், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 242 இடங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், 36 மாவட்ட ஊராட்சிகளில் 20 இடங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் மகளிர் பொறுப்பில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள 1,18,978 மக்கள் பிரதிநிதிகளில் 67,756 பேர் மகளிராக உள்ளனர்.இது மொத்தத்தில் 56% ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் & தலைமைத்துவ பண்புகளை பெற்றிடும் வகையில் உரிய பயிற்சிகளை வழங்க அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா: ஒன்றிய அரசு சொல்லாடல் குறித்து வானதி சீனிவாசன் காட்டம்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Halley Karthik

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

Halley Karthik