முக்கியச் செய்திகள் வணிகம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கணக்கு விவரங்கள்: விரைவில் 3 வது பட்டியல்

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களின் மூன்றாவது பட்டியல் இந்தியாவிடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

சுவிட்சா்லாந்து வங்கிகளிலுள்ள இந்தியா்களின் கணக்கு விவரங்கள் தொடா்பான மூன்றா வது பட்டியலை இந்த மாதம் மத்திய அரசு பெறவுள்ளது. அந்தப் பட்டியலில் முதல்முறை யாக ஸ்விட்சா்லாந்திலுள்ள இந்தியா்களின் ரியல் எஸ்டேட் சொத்துகளின் விவரங்களும் இடம்பெறவுள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா, சுவிட்சா்லாந்து இடையே தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்தியா்களின் கணக்கு விவரங்களை 2019-ம் வருடம் முதல் மத்திய அரசு பெற்று வருகிறது. இந்த விவரங்கள் அடங்கிய இரண் டாவது பட்டியலை கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு பெற்றிருந்த நிலையில், மூன் றாவது பட்டியலை இந்த மாதம் பெறுகிறது.

சுவிஸ் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியா்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த விவரங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய தொழிலதிபா்களின் தகவல்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!

Jayapriya

950 குழந்தைகளை மீட்ட பெண் காவலர்!

Jeba Arul Robinson

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Vandhana