ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடித்து ஆடிய நிலையில், ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று…

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடித்து ஆடிய நிலையில், ரன் குவிப்பில் புதிய மைல்கல்லை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று விளையாடியது.

லக்னௌவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கேப்டனாக தனது 100வது போட்டியில் விளையாடிய தொடக்க வீரரான ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களை கடந்துள்ளார். இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்- 34,357 ரன்கள், விராட் கோலி- 26,121 ரன்கள், ராகுல் திராவிட் – 24,064 ரன்கள்,  சௌரவ் கங்குலி- 18,433 ரன்கள்,  ரோஹித் சர்மா- 18,020. அதோடு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் (20) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.