பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் புதிய லுக்கில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் படிப்படியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை தனது தனித்துவமிக்க நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் இரும்புத்திரை, கோப்ரா மற்றும் ப்ளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரபலமாக அறியப்படும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ரோபோ சங்கர் இருந்து வருகிறார்.
ரோபோ சங்கர் மட்டுமல்லாமல் அவரது மகளான இந்திரஜா சங்கரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பிகிலு படத்தில் கால்பந்து வீராங்கனையான நடித்து சினிமா ரசிகர்களால் கவனித்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கரின் ஒல்லியான படங்கள் இணையத்தில் வெளியாகின. அதில் ரோபோ சங்கருக்கு உடல் நிலை மோசமாகி விட்டதாக பலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்தனர், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரோபோ சங்கருடைய மனைவி பிரியங்கா தன்னுடைய கணவருக்கு உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இன்று ரோபோ சங்கருடைய மகளான இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அப்பாவின் புதிய லுக்கில் உள்ள கெத்தான வீடியோவை பதிவிட்டுள்ளார். எனது அப்பா மீண்டும் ரொம்ப ஸ்ட்ராங்க , அதிகமான எனர்ஜியுடன் உள்ளார் என எழுதியுள்ளார். ரோபோ சங்கரின் குடும்பத்தினர் ஒரு திரைப்படத்திற்காக உடலை குறைத்துள்ளார்.




