தமிழகத்தில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் 2023-2024ஆம் ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகள், அதற்கான ஒப்புதல் மற்றும் அதன் பணிகள் எப்போது முடிவடையும் என மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2019-2020 முதல் 2023-2024 வரையிலான 5 ஆண்டுகளில் 60,000 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒப்புதலளித்துள்ளது.
அண்மைச் செய்தி: 5 மாத சிசு அளவிலான, கட்டியை அகற்றிய அரசு மருத்துவர் குழு
மேலும், திட்டமிடப்பட்ட இலக்கில் கடந்த மாதம் (பிப்ரவரி) வரை 31,609 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 28,391 கிலோமீட்டர் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 30 நெடுஞ்சாலை பணிகள் 907.2 கிலோமீட்டர் அளவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகனும், கடந்த பிப்ரவரி மாதம் வரையில் 657.6 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், மீதமுள்ள 249.6 கிலோமீட்டருக்கான பணிகள் 2023-2024ஆம் ஆண்டுகளில் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
– கோகுலபிரியா, மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








