கனரக வாகனங்களில் அதிக எடை ஏற்றி வருவதை, கண்காணிக்காமல் இருப்பதே சாலை விபத்துகள் ஏற்பட முக்கிய காரனமாக இருப்பதாக சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம், நம்மையும் காப்போம் 48 எனும் 5 அம்ச திட்டங்களை ஆதரிக்கும் வகையில், சென்னை லாரி, டிப்பர், டேங்கர் உள்ளிட்ட வாகனங்கள் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், சுங்கச்சாவடிகளில் கனரக வாகனங்களில் அதிக எடை ஏற்றி வருவதை சில அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என குற்றம் சாட்டிய அவர், இதனாலேயே பல விபத்துகள் நடைபெறுவதாகவும், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.








