ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே உள்ள கதவம்பட்டி, நெய்வாய்ப்பட்டி மற்றும் சொரியம்பட்டி…

புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே உள்ள கதவம்பட்டி, நெய்வாய்ப்பட்டி மற்றும்
சொரியம்பட்டி பகுதியில், இயங்கி வரும் தனியார் பன்றி வளர்ப்பு நிறுவனங்களில்
இருந்து வெளியேறும் கழிவுகள், அங்குள்ள உஞ்சலம் ஊருணியில் கலக்கின்றது. இதனால்,
அந்த நீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும், பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட
100க்கும் மேற்பட்டோர் , இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இந்த போரட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.