கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நலம்பெற கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திரு பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு, குணமடைந்து மக்கள் பணி தொடர்ந்திட எனது பிரார்த்தனைகள்.” என அவர் கூறியுள்ளார்.
விஜய் வசந்தின் பதவிக்கு பொன். ராதாகிருஷ்ணனும் நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், “நன்றி. விரைவில் நலமுடன் திரும்பிடுவேன். தங்களின் பிரார்த்தனைக்கு எனது உளபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.







