மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.   டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இந்த…

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும்,  பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார்.  இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.  இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கவிதாவை நீதிமன்றக் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்தது.  இந்த நிலையில்,  கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.