வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் – மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் பலி!

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனர், மேலும் 10 போ் படுகாயமடைந்தனர். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே…

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனர், மேலும் 10 போ் படுகாயமடைந்தனர்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதனால் மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 9 போ் உயிரிழந்தனா், மேலும் 10 படுகாயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மணிப்பூர் முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்தில் வீடு இழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். மணிப்பூருக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தாா். கலவர சதி தொடா்பான 6 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.