ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த ரிங்கு சிங்…வீடியோ வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷராக வலம் வரும் ரிங்கு சிங்,  நேற்றைய போட்டியில் ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் செவ்வாய்க்கிழமை 5…

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷராக வலம் வரும் ரிங்கு சிங்,  நேற்றைய போட்டியில் ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் செவ்வாய்க்கிழமை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும்,  சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடியால் இந்திய அணி 180 ரன்கள் குவித்தது.  இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதையும் படியுங்கள்: இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன் பங்கேற்பாரா?

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம் வீசிய 19-வது ஓவர் 4, 5-வது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து விளாசினார் ரிங்கு சிங்.  அந்த பந்து ஊடக அறையின் மீது விழுந்ததில் அறையின் கண்ணாடி நொறுங்கியது.  ரிங்கு சிங் அடித்த அந்த சிக்ஸரின் வீடியோ மற்றும் உடைந்த கண்ணாடியின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.