“அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது” – பெ. சண்முகம் கண்டனம்

அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருப்பதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக அரசியின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலை அரசி விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது.

இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.