திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!

திண்டுக்கல்லில் கணவன், மனைவி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் ஜேசுராஜ்(45). இவர் மீது 2024 ஆம் ஆண்டு மாயாண்டி ஜோசப் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றாவவாளியாக இருந்துள்ளார். இதனிடையே ஜேசுராஜ் பிணையில் வெளியே வந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் RMTC நகர் அருகே ஜேசுராஜை தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த ஜேசுராஜ் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே ஜேசுராஜ் இரண்டாவது மனைவியான தீபிகா என்பரை அவரது வீட்டின் முன்வைத்து மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவியை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கொலைகளை செய்த குற்றவாளிகளை எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.