வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்து ரூ.2,192.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலையை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று நிர்ணயித்துள்ளது.
அதன்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் ரூ.76 குறைத்து அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 76 குறைந்துள்ளது. கடந்த மார்ச்சில் ஒரு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2 ஆயிரத்து 268 ஆக இருந்தது.
இதையும் படிக்கவும் : திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!
ஏப்ரல் முதல் நாளான இன்று ரூ.76 குறைந்து ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2192.50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 1118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.







