உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் அறிவிப்பு!

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில்…

உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்சையானது. அவரை கோலி ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணியில் அவர் இடம் பெறாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடவில்லை. இடம்பெறவில்லை

24 வயதான அவர். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடு 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
எனினும் ஐபிஎல், பிபிஎல் போன்ற தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் நவீன், அதனை தொடர்வார் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.