கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கு சென்ற குழுந்தை இரவு 9 மணிக்கு வீடு திரும்பியதாக எக்ஸ் தளத்தில் பெங்களூருவை சேர்ந்த வாசகர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது.
மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை காரணமாக நேற்று பெங்களூருவில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதன் காரணமாக நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கு சென்ற குழந்தை இரவு 9 மணிக்கு வீடு திரும்பியதாகவும், போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் குறித்த போக்குவரத்து உயர் அதிகாரி அளித்த எக்ஸ் பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் குறித்து போக்குவரத்து இணை கமிஷனர் அளித்த விளக்கத்தை காண்போம்.
நானும் எனது அதிகாரிகள் அனைவரும் ORR சாலையில் உள்ளோம்.
1) போக்குவரத்து இயல்பை விட 2 மடங்கு அதிகம் . வழக்கமான வாகன எண்ணிக்கை 1.5 முதல் 2 லட்சம். இன்று (செப். 27) இரவு 7:30 மணி நிலவரப்படி வாகனங்களின் எண்ணிக்கை 3.59 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று பந்த் காரணமாக ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வந்து இன்று மாலை ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர்.
2) சுமார் 5 நாட்கள் தொடர் விடுமுறை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் பெங்களூருவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
3) மழையால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் அகற்றப்படவில்லை.
4) மழையால் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து மெதுவாக நகர்கிறது.
5) மதியம் 3:30 மணி முதல் 5 மணி வரையிலான காலகட்டத்தில், ஏற்கனவே மெட்ரோ பணியின் காரணமாக குறுகலான சாலைகளில் 6 வாகனங்கள் பழுதடைந்துள்ளன. நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என பதில் அளித்துள்ளார்.
போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரியின் இந்த பதிவுக்கு வாசகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.