அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’
திரைப்படம் வெளியாகியுள்ளது. கொலையாளி யார் என்று டிரைலரில் சொன்ன பிறகு என்ன சுவாரஸ்யம் இருக்க போகுது என்ற கேள்விக்கு பதில் என்ன? வாங்க விமர்சனத்தை பார்க்கலாம்…
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படத்தின் கதை
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான். அவனை காவல் ஆணையராக வரும் ஜெயம் ரவி எப்படி பிடிக்கிறார், கொலையாளி என்ன நோக்கத்தில் கொலை செய்கிறான் என்பது தான் படத்தின் கதை.
இதற்கு பிறகு என்ன கிண்டுவது என்று தெரியவில்லை. போர் தொழில், தனி ஒருவன் என்று எல்லா படத்தையும் மொத்தமாக போட்டு சமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்.
படம் பற்றிய ஒரு அலசல்
கிரைம் படத்திற்கு தேவையானது இன்வெஸ்டிகேஷன், விறு விறு காட்சிகள். இது எல்லாம் படத்தில் மிஸ்ஸிங். முதல் பாதி படத்தில் ஜெயம் ரவி, நயன் ஜோடியை பார்க்கும் போது தனி ஒருவன் படத்தையே கிரைம் படமாக எடுத்தால் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது.
இரண்டாம் பாதியில் கதை ஆரம்பித்து விட்டது என்று நினைத்தால் ஆரம்பித்த 20 நிமிடத்தில் மொக்கை கொடுத்து விட்டது. நரேன், நயன்தாரா, விஜயலக்ஷ்மி இவங்க யாருக்குமே படத்தில் scope இல்லை.
சென்டிமென்ட் சீன் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு, திரைக்கதை சிறிது நன்றாக பண்ணிருக்கலாம். யுவனின் bgm நன்றாக இருந்தாலும். பாடல்கள் மற்ற படங்களை போல் ரசிக்க வைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆடியன்ஸ் இறைவா என்னை காப்பாற்று என்று கதரும் mind voice தியேட்டரில் கேட்கிறது. மொத்தத்தில் கிரைம் என்ற பெயரில் பைத்தியம் பிடிக்கிறது.
—சுஷ்மா சுரேஷ்