முக்கியச் செய்திகள் உலகம்

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு – மலிங்கா

டி 20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். தற்போது இதனைத் தொடர்ந்து அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த டி 20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

84 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 122 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, 2014ல் டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

அழகர்கோயில் ஆடி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Jeba Arul Robinson

கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!

Halley karthi

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

Jayapriya